சினிமா துளிகள்

குடியரசு தினத்தை குறிவைத்த விஷால் + "||" + Vishal targeting Republic Day

குடியரசு தினத்தை குறிவைத்த விஷால்

குடியரசு தினத்தை குறிவைத்த விஷால்
எனிமி படத்தை தொடர்ந்து விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்திருக்கு படத்தை குடியரசு தினத்தில் வெளியிட இருக்கிறார்.
எனிமி படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்க, யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.


அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையில் விஷாலின் மாறுபட்ட நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. ஐதராபாத்தின் பல பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தை அடுத்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு 2022 ஜனவரி 26ம் தேதி படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சரோஜா தேவியை நேரில் சந்தித்த விஷால்
பழம்பெரும் நடிகை சரோஜா தேவியை நடிகர் விஷால் அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து நலம் விசாரித்து இருக்கிறார்.
2. என்னை அடி வெளுத்து வாங்கி விட்டான் ஆர்யா - விஷால்
விஷால், ஆர்யா ஆகிய இருவரும் இணைந்து நடித்த ‘எனிமி’ படம், தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.
3. சினிமா துறைக்கு நல்லது நடக்கும் - நடிகர் விஷால்
நடிகர் விஷால் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘'ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவதை வரவேற்கிறேன்.
4. கோர்ட்டு அபராதம் விதித்த ரூ.5 லட்சத்தை கல்வி உதவிக்கு வழங்குவேன் நடிகர் விஷால்
கோர்ட்டு அபராதம் விதித்த ரூ.5 லட்சத்தை கல்வி உதவிக்கு வழங்குவேன் நடிகர் விஷால்.
5. விஷாலுடன் நடிக்கிறேனா? பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில் நாயகியாக அறிமுகமான பிரியா பவானி சங்கருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.