சினிமா துளிகள்

பிக்பாஸ் ஆரவ் - ராஹி தம்பதிக்கு குழந்தை பிறந்தது + "||" + Big Boss Arav - Rahi couple has a baby

பிக்பாஸ் ஆரவ் - ராஹி தம்பதிக்கு குழந்தை பிறந்தது

பிக்பாஸ் ஆரவ் - ராஹி தம்பதிக்கு குழந்தை பிறந்தது
பிக்பாஸ் சீசன் ஒன் நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்வான ஆரவ் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார்.  


ஆரவ்வும், நடிகை ராஹியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் அவர்களது திருமணம் கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ந் தேதி நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில், தற்போது இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து ஆரவ்வுக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குழியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி
குழியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி
2. உளுந்தூர்பேட்டை அருகே பாிதாபம் சுடுகஞ்சி கொட்டி 1 வயது குழந்தை பலி
உளுந்தூர்பேட்டை அருகே சுடுகஞ்சி கொட்டி 1 வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
3. குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவையில்லை - மருத்துவ நிபுணர்கள் கருத்து
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவையில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறி உள்னர்.
4. அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை 30 மணி நேரத்தில் மீட்பு
தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட குழந்தையை 30 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். உதவுவது போல நடித்து கட்டைப்பையில் வைத்து குழந்தையை எடுத்துச்சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
5. 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு நடந்த பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது.