பிக்பாஸ் சீசன் 5 - கமலுக்கு பதிலாக களமிறங்கிய பிரபல நடிகை


பிக்பாஸ் சீசன் 5 - கமலுக்கு பதிலாக களமிறங்கிய பிரபல நடிகை
x
தினத்தந்தி 28 Nov 2021 11:42 PM IST (Updated: 28 Nov 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் இருக்கும் கமல்ஹாசனுக்கு பதிலாக பிரபல நடிகை ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்று தொகுத்து வழங்கி இருக்கிறார்.

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அவருடைய எளிமையான அணுகுமுறையும், விஷய ஞானமும் இந்த நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்களைக் கொண்டுவந்து சேர்த்தது.

இந்நிலையில் கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவர் தொகுத்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலுக்குப் பதில் தொகுப்பாளராக நியமிக்க, ரம்யா கிருஷ்ணன், சூர்யா, விஜய் சேதுபதி, மாதவன், ஸ்ருதிஹாசன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது.

இறுதியாக ரம்யா கிருஷ்ணன் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், இன்று வெளியான புரமோவில் வீடியோ மூலம் போட்டியாளர்களிடம் பேசிய கமல், எனக்கு உதவியாக எனது தோழி ரம்யா கிருஷ்ணன் எனக்கு உதவியாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறி அறிமுகம் படுத்தி இருக்கிறார்.

ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story