சினிமா துளிகள்

அடாத மழையில் விடாமல் வேலை செய்யும் சாக்‌ஷி அகர்வால் + "||" + Sakshi Agarwal working tirelessly in the pouring rain

அடாத மழையில் விடாமல் வேலை செய்யும் சாக்‌ஷி அகர்வால்

அடாத மழையில் விடாமல் வேலை செய்யும் சாக்‌ஷி அகர்வால்
சென்னையில் பெய்து வரும் கன மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நிலையில் தனது வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார் சாக்‌ஷி அகர்வால்.
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.


சமீபத்தில் சாக்‌ஷி அகர்வால் நடிப்பில், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் வெளியானது. மேலும் நான் கடவுள் இல்லை திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அடுத்ததாக ‘தி நைட்’ என்னும் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டப்பிங் பணிக்காக அடாத மழையில் தண்ணீர் நடந்து சென்று தனது வேலையை முடித்து இருக்கிறார். தற்போது இதன் புகைப்படங்கள் சமூக வலைத் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்த நாட்டில் வாரத்திற்கு 4.5 நாள் வேலை செஞ்சா போதும்...
உலகில் முதன்முறையாக வாரத்திற்கு 4.5 நாட்கள் வேலை நாட்களாக இந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
2. அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.4 கோடி மோசடி கணவன்-மனைவி கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 60 பேர்களிடம் ரூ.4 கோடி சுருட்டிய கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
3. நடிகைகளை அழகாக காண்பிப்பார் - சாக்‌ஷி அகர்வால்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வால், தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.