சினிமா துளிகள்

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ரிது வர்மா + "||" + Ritu Verma is the partner of the famous actor

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ரிது வர்மா

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ரிது வர்மா
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ரிது வர்மா, பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருக்கக்கூடியவர் ரிது வர்மா, இவர் பெல்லி சூப்புலு படத்தில் நடித்த பிறகு பல இயக்குநர்களின் கதைகளுக்கு ஒரு நாயகியாகவே மாறிப்போனார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமின் ஜோடியாக நடிக்க வைத்தார்.


மேலும் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்தார். அவருடைய இயல்பான நடிப்பும் சின்சியாரிடியும் ரிது வர்மாவுக்குத் தமிழில் அதிக படங்களைக் கொண்டு வந்து சேர்க்க ஆரம்பித்திருக்கிறது. தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் கணம் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல நடிகருக்கு ஜோடியாகும் தான்யா ரவிச்சந்திரன்
விஜய் சேதுபதி நடித்து வெளியான கருப்பன் திரைப்படத்தில் நடித்த தான்யா ரவிச்சந்திரன், பிரபல நடிகரின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்கிறார்.
2. பிரபல நடிகருக்கு ஜோடியாகும் மனிஷா யாதவ்
வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா, ஒரு குப்பை கதை படங்களில் நடித்த மனிஷா யாதவ் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
3. மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.