மார்க் ஆண்டனியாக களமிறங்கும் விஷால்

வீரவே வாகை சூடும் படத்திற்கு பிறகு விஷால் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து அவருடைய அடுத்த படத்தின் அப்டேட்டை அவர் வெளியிட்டுள்ளார். விஷாலின் 33வது திரைப்படத்தை யார் இயக்க போவது என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் அப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
இந்த படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மார்க் ஆண்டனி என்ற பெயர் 1995-ல் ரஜினி நடிப்பில் வெளியான பாட்சா திரைப்படத்தின் வில்லன் ரகுவரனின் கதாப்பாத்திர பெயராகும். விஷாலுடன் இப்படத்தில் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார்.
இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story