ஒமைக்ரான் எதிரொலி... ரசிகர்கள் சந்திப்பை ஒத்திவைத்த சிம்பு


ஒமைக்ரான் எதிரொலி... ரசிகர்கள் சந்திப்பை ஒத்திவைத்த சிம்பு
x
தினத்தந்தி 4 Jan 2022 11:28 PM IST (Updated: 4 Jan 2022 11:28 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் சிம்பு நடித்த மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒமைக்ரான் பரவல் காரணமாக ரசிகர்களுடனான சந்திப்பை நடிகர் சிம்பு ஒத்திவைத்துள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாநாடு'. இந்த திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் வெற்றித் திரைப்படமாக ஆனது. நடிகர் சிம்பு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் சமீபத்தில் நடந்த வெற்றி விழாவில் கலந்துக் கொள்ளவில்லை.

இதையடுத்து வருகிற ஜனவரி 6-ம் தேதி சென்னையில் தனது ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார் சிம்பு. இந்நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில், ரசிகர்களுடனான வெற்றி விழா கொண்டாட்ட கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக சிம்பு அறிவித்துள்ளார்.
1 More update

Next Story