உதயநிதி படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்


உதயநிதி படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்
x
தினத்தந்தி 5 Jan 2022 5:51 PM GMT (Updated: 5 Jan 2022 5:51 PM GMT)

பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகர் கை கோர்த்திருக்கிறார்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். தற்போது இவர் 'ஆர்டிகிள் 15' இந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான 'நெஞ்சுக்கு நீதி' படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து அவர் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இந்த திரைப்படத்தை 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற 'புஷ்பா' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பகத் பாசில், உதயநிதியின் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இவர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உதயநிதியின் இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தின் பணிகள் முடிந்ததும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பிற நடிகர்கள் மற்றும் குழு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

Next Story