குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற பிரபல நடிகர்


குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற பிரபல நடிகர்
x
தினத்தந்தி 6 Jan 2022 11:45 PM IST (Updated: 6 Jan 2022 11:45 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் முதல் முறையாக அவரது குழந்தைகளுடன் சுற்றுலா சென்றிருக்கிறார்.

தன்னுடைய நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் விரும்பன் படப்பிடிப்பை முடித்திருந்தார். பெரும்பாலும் சினிமா பிரபலங்கள் படங்களில் அதிக கவனம் செலுத்துவதால் குடும்பங்களுடன் நேரம் செலவழிப்பது குறைவு, எனவே விடுமுறை நாட்களில் அவர்கள் குடும்பங்களுடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துவருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் கார்த்தி விரும்பன் படப்பிடிப்பை முடித்த பிறகு முதல் முறையாக அவரின் குழந்தைகளுடன் சுற்றுலா சென்றிருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு பிறகு குழந்தைகளுடன் செல்லும் முதல் சுற்றுலா என்று அவர் குறிப்பிட்டு அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
1 More update

Next Story