நான் நலமாக இருக்கிறேன்... வீடியோ வெளியிட்ட டி.பி.கஜேந்திரன்


நான் நலமாக இருக்கிறேன்... வீடியோ வெளியிட்ட டி.பி.கஜேந்திரன்
x
தினத்தந்தி 7 Jan 2022 6:00 PM GMT (Updated: 7 Jan 2022 6:00 PM GMT)

இயக்குனரும் பிரபல நடிகருமான டி.பி.கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று இருப்பதாக வெளியான செய்திக்கு, அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும் முக்கிய பிரமுகர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அவ்வகையில், பிரபல இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து டி.பி.கஜேந்திரன், வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், நான் நலமாக இருக்கிறேன். உங்களுடைய அன்புக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.


Next Story