நண்பர்களுடன் புகைப்படம் எடுத்த மம்முட்டி.... வைரலாகும் புகைப்படம்


நண்பர்களுடன் புகைப்படம் எடுத்த மம்முட்டி.... வைரலாகும் புகைப்படம்
x
தினத்தந்தி 11 Jan 2022 4:52 PM GMT (Updated: 11 Jan 2022 4:52 PM GMT)

மலையாள சினிமா உலகில் உச்ச நடிகராக இருக்கும் மம்முட்டி, தனது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

எண்பது தொண்ணூறுகளில் புகழ்பெற்ற முன்னணி நட்சத்திரங்களாக விளங்கியவர்கள், வருடத்திற்கு ஒருமுறை ஒன்றாக சந்தித்து தங்களது நினைவுகளை பரிமாறிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்களின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகும்.

ஆனால், தற்போது நடிகர் மம்முட்டி நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் தனது கல்லூரி கால நண்பர்களை சந்தித்த மம்முட்டி, அவர்களுடன் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் மம்முட்டி ஒருவரே மிகவும் இளமையாக காட்சி அளிக்கிறார். 70 வயது ஆனாலும் இன்றும் இளமையாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

Next Story