தீவிர உடற்பயிற்சியில் சமந்தா... வைரலாகும் வீடியோ


தீவிர உடற்பயிற்சியில் சமந்தா... வைரலாகும் வீடியோ
x
தினத்தந்தி 12 Jan 2022 10:23 PM IST (Updated: 12 Jan 2022 10:23 PM IST)
t-max-icont-min-icon

முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் வீடியோவிற்கு அதிக லைக்குகள் குவிந்து வருகிறது.

நடிகை சமந்தா கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்து மீண்டும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியிருந்தார் சமந்தா. அந்த பாடல் வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், இளைஞர்களை அதிகளவில் கவர்ந்தது.

இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார். இந்நிலையில், உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சமந்தா பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிக லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

1 More update

Next Story