தண்ணி வண்டி பிரச்சனை - மவுனம் கலைத்த தம்பி ராமையா


தண்ணி வண்டி பிரச்சனை - மவுனம் கலைத்த தம்பி ராமையா
x
தினத்தந்தி 12 Jan 2022 5:57 PM GMT (Updated: 12 Jan 2022 5:57 PM GMT)

தன் மகன் உமாபதி ராமையா நடிப்பில் வெளியான தண்ணி வண்டி படத்தின் பிரச்சனை குறித்து நடிகர் தம்பி ராமையா பேசியிருக்கிறார்.

தமிழில் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர் தம்பி ராமையா. இவரது மகன் உமாபதி ராமையா. இவர் நடிப்பில் சமீபத்தில் தண்ணி வண்டி என்ற திரைப்படம் வெளியானது.

இப்படத்தின் புரமோஷனுக்கு உமாபதி ராமையா வரவில்லை என்றும், வேண்டுமென்றே தன்னை கஷ்டப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இவரும் இவருடைய தகப்பனார் இணைந்து கூட்டு சதி செய்து திட்டமிட்டு எனது படத்தை தோல்வியாக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் செயல்படுகிறார் என்றும் படத்தின் தயாரிப்பாளர் சரவணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் தம்பி ராமையா தண்ணி வண்டி பிரச்சனை குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறும்போது, நான் என் மகனுக்காக எந்த இடத்திலும் வாய்ப்பு கேட்டது கிடையாது. நீயே போ, விழுந்து எழுந்து வாய்ப்பு தேடு என்று சொல்லிவிட்டேன். நான் அப்படித்தான் தேடினேன். உன் தோல்விதான் உன்னை உயர்த்தும் என்றேன்.

நான் நல்லா இருக்க காரணம் பிரபு சாலமன்தான். அவருக்காக ஒரு படத்தில் நடிக்க சென்றேன். அதனால் தான் தண்ணி வண்டி பிரச்சனைக்கு எதுவும் பேசவில்லை. தண்ணி வண்டி படத்தின் இயக்குனரிடம் முதலில் சொன்னேன். எனது மகனின் சிறுத்தை சிவா என்ற படம் உருவாகி இருக்கிறது. அந்தப் படம் வெளியானதும் தண்ணி வண்டி படத்தை வெளியிடலாம் என்று சொன்னேன் ஆனால் அவர் மறுத்து விட்டார்கள். என் மகன் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு கொரோனா பாதிக்கப்பட்டு உடல் எடை குறைந்து வந்தான். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவனது உடல் நிலை மிகவும் முக்கியம் அதனால் தான் தண்ணி வண்டி புரமோஷனில் அவர் கலந்து கொள்ள முடியவில்லை என்றார்.

Next Story