நடிகர் சித்தார்த் மீது ஜதராபாத் போலீஸ் வழக்கு


நடிகர் சித்தார்த் மீது ஜதராபாத் போலீஸ் வழக்கு
x
தினத்தந்தி 14 Jan 2022 10:25 PM IST (Updated: 14 Jan 2022 10:25 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் சித்தார்த் மீதுந டவடிக்கை எடுக்ககோரி மகாராஷ்டிரா மாநில டி.ஜி.பி.யிடம் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக ஜதராபாத் சைபர் கிரைம் போலீசில் பெண் ஒருவர் புகார் கொடுத்தார்.

பஞ்சாப்பில் பிரதமர் பாதுகாப்பு தொடர்பாக பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் கருத்து வெளியிட்டு இருந்தார். இதற்கு நடிகர் சித்தார்த் டுவிட்டரில் பதிலடி கொடுத்தார்.

அதில் அவர் இரட்டை அர்த்தத்துடன் சாய்னா நேவாலை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக சர்ச்சை எழுந்தது.

இதற்கு பெண் அமைப்பினர் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து நடிகர் சித்தார்த் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் இந்த பிரச்சினை இன்னும் முடியவில்லை.

சித்தார்த் மீதுந டவடிக்கை எடுக்ககோரி மகாராஷ்டிரா மாநில டி.ஜி.பி.யிடம் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக ஜதராபாத் சைபர் கிரைம் போலீசில் பெண் ஒருவர் புகார் கொடுத்தார்.

இதன் பேரில் சித்தார்த் மீது 509 வது பிரிவின் கீழ் பெண்களின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவது, எழுதுவது போன்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
1 More update

Next Story