சினிமா துளிகள்

காதல் காட்சிகளே இல்லாத காதல் படம் - பார்த்திபன் நெகிழ்ச்சி + "||" + Love movie without love scenes - Parthiban flexibility

காதல் காட்சிகளே இல்லாத காதல் படம் - பார்த்திபன் நெகிழ்ச்சி

காதல் காட்சிகளே இல்லாத காதல் படம் - பார்த்திபன் நெகிழ்ச்சி
இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் அவருடைய சமூக வலைத்தளத்தில் காதல் காட்சிகளே இல்லாத காதல் படம் என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் இதனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டில் வெளி வந்த திரைப்படம் “அழகி”. இந்த படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி, மோனிகா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், அழகி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. அதுமட்டும் இல்லாமல் சிறந்த திரைப்படத்திற்கான பல விருதுகளையும் குவித்தது.


இப்படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகியிருக்கும் நிலையில், இயக்குனரும் நடிகருமான பார்த்திபன், தனது சமூக வலைத்தள பக்கத்தில், அழகி age 20! ஊரான் காதலை ஊட்டி வளத்தா, தன் காதலி தானா வளருவான்னு காதலூர் பக்கம் கா(த்)து வாக்குல சொல்லுவாங்க.. அப்படி ஆகச்சிறந்த கலைஞன் தங்கர் பச்சானின் அழகியை நான் ஜீவனூற்றி காதலிக்க, அந்தக் காதலை ஊரே போற்றி கொண்டாடி இரு பத்து ஆண்டுகள்  இன்றோடு. (எனக்கோ என்றும் காதல் தாண்டா கவிமனது!) எப்டி^ Bracket ^ பண்றதுங்கிறதை கத்துக்கிறதுதான் மைய(ல்) பகுதி of காதல்! சரி matterக்கு வருவோம்.. அழகிக்கு கிடைத்த பாராட்டு முத்தம் ஒவ்வொன்றும் நண்பர் தங்கரையே சேரும். அவரின் அழகிய கன்னி முயற்சியை திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்து திக்குமுக்காட வைத்தது. காதல் காட்சிகளே இல்லாத ஒரு காதல் படம்-காலத்திற்கும் கொண்டாட காரணம், ஒப்பனையில்லா நிஜதன்மை நிறைந்த காதல். எல்லோர் வாழ்விலும் வந்துப் போன (அ) நொந்துப் போன காதல் வடு ‘அழகி’! தேவதாஸ் பார்வதிக்கு பின் சண்முகம் தனலட்சுமி என்றளவில் இன்றளவும் இதயத்தை (20)வருட சண்முகத்தின் part 1, part 2 ஆகி இறுதிவரை இணைப்பற்று போனதால்,Part 2 எடுத்தாவது அத்துப்போன காதலை அர்த்தப்படுத்த முயற்சிக்கிறார் திரு தங்கர்.ஒரு காவிய தயாரிப்பாளர் சிக்கினால் விரைவில் அழகி 2 ! என்று நெகிழ்ச்சியாக பதிவு செய்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. மகளின் முகத்தை வெளியிடாததற்கு நன்றி - அனுஷ்கா சர்மா நெகிழ்ச்சி
தன் மகளை விளம்பர வெளிச்சம் இல்லாமல் வளர்க்க நினைப்பதாக நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.
2. பார்த்திபனை இயக்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது - டைரக்டர் எழில்
பார்த்திபன், கவுதம் கார்த்திக் இருவரும் இணைந்து நடிக்கும் படம், ‘யுத்த சத்தம்.’ இந்தப் படத்தை டைரக்டர் எழில் இயக்குகிறார்.
3. 6 ஆண்டுகள் ஆகிவிட்டது - விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி
இயக்குனர் பாடலாசிரியராக இருக்கும் விக்னேஷ் சிவன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.
4. ஜோதிகா கணவனாக இருப்பது பெருமை நடிகர் சூர்யா நெகிழ்ச்சி
ஜோதிகா கணவனாக இருப்பது பெருமை நடிகர் சூர்யா நெகிழ்ச்சி.
5. “நண்பர்களாக மாறிய நடிகர்கள்” படவிழாவில் நடிகை நெகிழ்ச்சி
இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி, ‘மீசையை முறுக்கு’ படத்தின் மூலம் டைரக்டர் ஆனார்.