சினிமா துளிகள்

ஒன் 2 ஒன் மோதும் சுந்தர்.சி + "||" + One 2 One collision Sundar.C

ஒன் 2 ஒன் மோதும் சுந்தர்.சி

ஒன் 2 ஒன் மோதும் சுந்தர்.சி
பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சுந்தர்.சி, அடுத்ததாக ஒன் 2 ஒன் என்ற பெயரில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
திரிஷா நடிப்பில் வெளியான பரமபதம் விளையாட்டு படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.திருஞானம் இயக்கும் இரண்டாவது படம் ஒன் 2 ஒன். விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகும் இப்படத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ராகினி திவேதி நடிக்கின்றார். விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


மேலும் இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல முன்னனி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 24 ஹவர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது. இம்மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன்
முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இருவரும் 6 வருடங்களுக்குப் பிறகு நேருக்கு நேர் மோத இருக்கிறார்கள்.
2. அரண்மனை 3 படத்தை பார்த்த ஒரே நபர் அவர்தான் - சுந்தர்.சி
அரண்மனை, அரண்மனை 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து, சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 3 திரைப்படம் உருவாகியுள்ளது.