இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 10 Jun 2025 7:51 PM IST
காசாவில் நிவாரண உதவி மையம் அருகே இஸ்ரேல் தாக்குதல் - 25 பேர் உயிரிழப்பு
காசாவில் நிவாரண உதவி மையம் அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ராணுவ முகாம் அருகே சந்தேகத்துக்கிடமான நபர்கள் இருந்ததால் அவர்களை நோக்கி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
- 10 Jun 2025 7:00 PM IST
டிஎன்பிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சு தேர்வு
இன்று நடைபெறுகின்ற 7-வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதன்படி சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்ய உள்ளது.
- 10 Jun 2025 6:44 PM IST
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: பிளேயிங் லெவனை உறுதி செய்த டெம்பா பவுமா
நாளை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா அறிவித்துள்ளார்.
- 10 Jun 2025 6:43 PM IST
சென்னையில் மழை காரணமாக விமான சேவைகள் பாதிப்பு
சென்னையில் மழை காரணமாக தரையிறங்க முடியாமல் 10 விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன; 12 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
- 10 Jun 2025 6:01 PM IST
பயணிகள் கவனத்திற்கு.. ரெயில் சேவைகளில் மாற்றம் - வெளியான முக்கிய அறிவிப்பு
ரெயில் எண் 16848 செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்
13, 14, 16, 17, 18, 20, 21, 23, 24, 25, 27, 28 மற்றும் 30ம் தேதி ஜூன் 2025 அன்று காலை 06.55 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் இந்த ரெயில், விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக இயக்கப்படும்.
கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி மற்றும் மணப்பாறை ஆகிய நிலையங்களில் இந்த ரெயில் நிற்காது.
பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும்.
- 10 Jun 2025 5:41 PM IST
சென்னையில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் 12.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 10 Jun 2025 4:57 PM IST
ராஜஸ்தான்: பனாஸ் நதியில் மூழ்கி 8 இளைஞர்கள் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 8 இளைஞர்கள் மூழ்கி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 10 Jun 2025 4:53 PM IST
பா.ம.க. பொதுக்குழு - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
முதற்கட்டமாக வரும் 15 முதல் 19ம் தேதி வரை 10 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 10 Jun 2025 4:30 PM IST
ஆர்ப்பாட்டம் நடத்துவது அடிப்படை உரிமை - ஐகோர்ட்டு மதுரைக்கிளை
அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டபடி போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது அடிப்படை உரிமை என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
முன்னதாக ஜாக்டோ- ஜியோ அறிவித்த வேலைநிறுத்தம் மற்றும் சாலை மறியல் போரட்டத்திற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.
- 10 Jun 2025 4:13 PM IST
ஆர்சிபி அணியை விற்க உரிமையாளர் முடிவு..? ரசிகர்கள் அதிர்ச்சி
ஆர்சிபி அணியின் 18 ஆண்டு கால ஏக்கம் இந்த ஐ.பி.எல். சீசனோடு தணிந்தது. ஐ.பி.எல். வரலாற்றில் முதல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றியை அணியின் வீரர்கள் மட்டுமின்றி பல ரசிகர்களும் வெறித்தனமாக கொண்டாடி தீர்த்தனர்.