மாநாடு படத்துக்கு குவியும் விருதுகள்


மாநாடு படத்துக்கு குவியும் விருதுகள்
x
தினத்தந்தி 16 Jan 2022 10:10 PM IST (Updated: 16 Jan 2022 10:10 PM IST)
t-max-icont-min-icon

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்திற்கு நான்கு விருதுகள் கிடைத்துள்ளது.

ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாநாடு’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்து இருந்தார். இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

இப்படம் பல தடைக்களை கடந்து நவம்பர் 25ம் தேதி தியேட்டரில் வெளியானது. படம் பார்த்த அனைவரும் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள். தற்போது இப்படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், மாநாடு திரைப்படம் நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் நான்கு விருதுகளைப் பெற்றுள்ளது. சிறந்த இயக்குனராக வெங்கட் பிரபு, சிறந்த இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா, சிறந்த வில்லன் நடிகராக எஸ்.ஜே.சூர்யா மற்றும் சிறந்த எடிட்டிங்குக்கான விருது பிரவீன் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு கலைச்சிகரம் விருது வழங்கப்பட்டுள்ளது.
1 More update

Next Story