சினிமா துளிகள்

ஆஸ்கரில் இடம்பெற்ற ஜெய்பீம் திரைப்படம் + "||" + Jaybeam movie at the Oscars

ஆஸ்கரில் இடம்பெற்ற ஜெய்பீம் திரைப்படம்

ஆஸ்கரில் இடம்பெற்ற ஜெய்பீம் திரைப்படம்
உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றான ஆஸ்கர். அவர்களுடைய யூடியூப் சேனலில் தமிழ் படமான ஜெய்பீம் படத்தின் சில காட்சிகளை பதிவேற்றம் செய்துள்ளது.
உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. பல நாடுகளில் இருந்து தேந்தெடுக்கும் படங்களுக்கு விருது வழங்கி ஆஸ்கர் கௌரவிக்கப்படும். இந்த விருதுகளுக்கு பல படங்கள் போட்டியிட்டு அதில் சில படங்களே தேந்தெடுக்கப்படும். அந்த ஆஸ்கரின் யூடியூப் சேனலில் ’ சீன் அட் தி அகாடமி ‘ என்ற தலைப்பில் சில வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறது.


அந்த வகையில் டி.ஜே. ஞானவேல் இயக்கித்தில் சூர்யா, லிஜிமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன் போன்ற பலரும் நடித்து அனைவரின் மத்தியிலும் பெரிதும் வெற்றிப்பெற்ற ஜெய்பீம் திரைப்படத்தின் காட்சிகளை பதிவேற்றம் செய்திருக்கிறது ஆஸ்கர். அந்த வீடியோவில் ஜெய்பீம் திரைப்படத்தின் சில காட்சிகளையும் படத்தின் இயக்குனர் அந்த படத்தை பற்றி பேசும் சில விஷயங்களையும் ஆஸ்கர் பகிர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவிற்கு இது மிக பெரிய கவுரவம் என்று சமூக வலைத்தளங்களில் அனைவரும் பதிவிட்டு அப்படத்தை வாழ்த்தி வருகின்றனர். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. வசூலை குவிக்கும் நயன்தாரா திரைப்படம்
நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வசூல் ரூ.50 கோடிக்கு மேல் தாண்டியுள்ளது.
2. ‘ஜெய்பீம்’ பட விவகாரம் சூர்யா, ஜோதிகா மீது வழக்குப்பதிவு
‘ஜெய்பீம்’ பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, ஜோதிகா உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யும்படி சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. ஜெய்பீம் திரைப்பட விவகாரம்; சூர்யா, ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட் உத்தரவு
ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குனருக்கு எதிரான புகார் மீது வழக்குப்பதிவு செய்ய வேளச்சேரி காவல் நிலையத்திற்கு சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
4. ரிலீசுக்கு தயாரான அமலாபால் திரைப்படம்
கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படம் வெளியாக தயாராகி உள்ளது.
5. தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா - 2 விருதுகளை வென்ற 'ஜெய்பீம்'
தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் விருதுகள் பட்டியல் வெளியான நிலையில் ,ஜெய்பீம் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன .