இணைய தொடரில் நடிக்கும் பிரசன்னா


இணைய தொடரில் நடிக்கும் பிரசன்னா
x
தினத்தந்தி 19 Jan 2022 4:39 PM GMT (Updated: 19 Jan 2022 4:39 PM GMT)

பல படங்களில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்துள்ள பிரசன்னா தற்போது இணைய தொடரில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

தமிழ் 5 ஸ்டார் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் பிரசன்னா. இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். மாபியா படத்தில் வில்லன் வேடத்திலும் நடித்திருந்தார். தற்போது இணைய தொடரில் நடிக்க இருக்கிறார் பிரசன்னா.

காமெடி டிராமா இணைய தொடராக உருவாகும் இத்தொடரில் பிரசன்னாவுடன் SPB சரண், தன்யா பாலகிருஷ்ணா, கனிகா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் இத்தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2022 இத்தொடரின் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது.

இந்த புதிய தமிழ் இணைய தொடர் இயக்குனர் பாலாஜி மோகனின் உதவி இயக்குனராக பணிபுரிந்த, அறிமுக இயக்குனர் விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்குகிறார்.

Next Story