ஆண்டவர் படத்தை இயக்கும் கரு.பழனியப்பன்


ஆண்டவர் படத்தை இயக்கும் கரு.பழனியப்பன்
x
தினத்தந்தி 19 Jan 2022 5:00 PM GMT (Updated: 19 Jan 2022 5:00 PM GMT)

தமிழ் சினிமாவில் தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கரு பழனியப்பன் ஆண்டவர் படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் கரு.பழனியப்பன். இவர் கடைசியாக ஜன்னல் ஓரம் என்ற படத்தை இயக்கி இருந்தார். தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார் கரு.பழனியப்பன்.

இவர் இயக்கும் புதிய படத்திற்கு ஆண்டவர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. விரைவில் படக்குழுவினர் பற்றிய விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story