நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் திருட்டு


நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் திருட்டு
x
தினத்தந்தி 19 Jan 2022 11:36 PM IST (Updated: 19 Jan 2022 11:36 PM IST)
t-max-icont-min-icon

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்து வரும் நிக்கி கல்ராணி வீட்டில் விலை உயர்ந்த பொருட்களை திருடியவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

டார்லிங் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. மரகத நாணயம், கோ 2 போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது ராயப்பேட்டையில் உள்ள தனியார் சொகுசு குடியிருப்பில் தங்கியுள்ளார்.
 
அவருடைய வீட்டில் வேலை பார்ப்பதற்காக தனியார் ஏஜென்சி மூலம் தனுஷ் என்பவரை நியமித்து இருந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி 11-ந்தேதி, வீட்டு வேலை பார்க்கும் தனுஷ் சந்தேகத்திற்கு இடமாக மறைத்து சில பொருட்களை எடுத்து சென்றுள்ளார். இதன் பின்னர் வீட்டில் சோதனை செய்தபோது விலை உயர்ந்த கேமரா மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் துணிகள், பொருட்கள் காணாமல் போனதை கண்டு நிக்கி கல்ராணி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் நிக்கி கல்ராணி புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். தனுஷ் பொருட்களைத் திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. தனுஷ் திருப்பூரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து திருப்பூரில் மறைந்திருந்த தனுசை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில் விலை உயர்ந்த கேமராவை நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் இருந்து திருடியதாகவும் கோவையில் ஒரு கடையில் விற்பனை செய்துவிட்டு திருப்பூரில் நண்பர் வீட்டில் தங்கி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பிடிபட்ட தனுசை சென்னை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
1 More update

Next Story