மீண்டும் இணைந்த வலிமை கூட்டணி - தொடங்கிய படப்பிடிப்பு?


மீண்டும் இணைந்த வலிமை கூட்டணி - தொடங்கிய படப்பிடிப்பு?
x
தினத்தந்தி 19 Jan 2022 11:42 PM IST (Updated: 19 Jan 2022 11:42 PM IST)
t-max-icont-min-icon

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்து படத்தின் வேலைகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படம் கொரோனா பரவலால் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டது.

நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் இணைந்த இந்த கூட்டணி அதனை தொடர்ந்து ‘வலிமை’ படத்திற்காக இணைந்தது. அதன் பிறகு மூன்றாவது முறையாக அஜீத் - எச்.வினோத் - போனி கபூர் கூட்டணி மீண்டும் இணைகிறது. உலக அளவில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பற்றி இப்படம் பேசவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹைதரபாத்தில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து படத்தின் பணிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
1 More update

Next Story