சிம்புவின் அடுத்த பட அப்டேட்


சிம்புவின் அடுத்த பட அப்டேட்
x
தினத்தந்தி 20 Jan 2022 6:19 PM GMT (Updated: 20 Jan 2022 6:19 PM GMT)

வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களை தொடர்ந்து இளம் இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு.

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார். இப் படத்தை அடுத்து பத்து தல, கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் நடிக்க இருக்கிறார்.

இதை அடுத்து அஸ்வத் மாரிமுத்து உடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து 'ஓ மை கடவுளே' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்து கோலிவுட்டின் நம்பிக்கைக்குரிய இளம் இயக்குனர்களில் ஒருவராக மாறினார். தற்போது அவர் ஓ மை கடவுளே படத்தை தெலுங்கில் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தை அடுத்து சிம்புவுடன் கூட்டணி அமைக்க இருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story