புரட்சிகரமான வக்கீல் வேடத்தில் வனிதா விஜயகுமார்


புரட்சிகரமான வக்கீல் வேடத்தில் வனிதா விஜயகுமார்
x
தினத்தந்தி 21 Jan 2022 3:52 PM IST (Updated: 21 Jan 2022 3:52 PM IST)
t-max-icont-min-icon

வனிதா விஜயகுமார் புரட்சிகரமான வக்கீல் வேடத்தில் நடிக்கும் படத்துக்கு ‘சிவப்பு மனிதர்கள்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது பற்றி படத்தின் டைரக்டர் அன்பு சரவணன் கூறுகிறார்:-

‘‘இந்திய திரையுலகில் இதுவரை சொல்லப்படாத சட்டத்தின் மறுபக்கத்தை சொல்லி, அதிர்வலையை ஏற்படுத்த இருக்கிறது, ‘சிவப்பு மனிதர்கள்’ படம். இதில் காதலும், காதல் சார்ந்த உணர்வுகளும் யதார்த்தமாக சொல்லப்பட்டுள்ளது.

இன்னொரு வக்கீலாக லிவிங்ஸ்டன் நடிக்கிறார். கதையின் நாயகனாக ஸ்ரீராம் கார்த்திக்கும், நாயகியாக மீனாட்சியும் நடிக்கிறார்கள். பி.டி.அரசகுமார் தயாரிக்கிறார்.
1 More update

Next Story