திருமணம் எப்போது? பதில் அளித்த பாவ்னி


திருமணம் எப்போது? பதில் அளித்த பாவ்னி
x
தினத்தந்தி 23 Jan 2022 10:18 PM IST (Updated: 23 Jan 2022 10:18 PM IST)
t-max-icont-min-icon

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பாவ்னி, திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் உறுதுணை கதாபாத்திரங்களிலும் சீரியவிலும் நடித்து வந்த நடிகை பாவ்னி தமிழில் 'ரெட்டை வால் குருவி' சீரியல் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளவர், 'பிக்பாஸ் சீசன் 5' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

கடைசிநாட்கள் வரை சிறப்பாக விளையாடி மூன்றாவது இடத்தினைப் பிடித்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த இவர், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபினய் உடன் ஏற்பட்ட உறவு சர்ச்சைக்குள்ளானது. அதே போல் அமீர் காதலிப்பதாக கூறிய போதிலும் அந்த காதலை ஏற்று கொள்ளாமல் அவரை பாவ்னி தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் ரசிகர்களுடன் சமீபத்தில் உரையாடிய பாவ்னி, தனது திருமணம் குறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்தபோது, ‘வாழ்க்கையில் இனி திருமணம் என்பதே இல்லை என்றும் தன்னுடைய முழு கவனமும் இனி நடிப்பில் தான் இருக்கப் போகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
1 More update

Next Story