லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மாஸ்டர் மகேந்திரன் பட பர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமாவின் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்ட மாஸ்டர் மகேந்திரனின் அடுத்த படத்தின் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பயணத்தை தொடங்கி பிறகு கதாநாயகனாக வலம் வருபவர் மாஸ்டர் மகேந்திரன். 1994-இல் வெளியான நாட்டாமை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கோயம்புத்தூர் மாப்பிள்ளை, நட்புக்காக, படையப்பா போன்ற பல படங்களில் நடித்து பிறகு விழா படத்தின் மூலம் கதாநாயகனாக மாறினார். இவர் சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் சிறு வயது விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
தற்போது ரிப்பப்பரி என்ற படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாக உருவெடுக்கிறார். ரிப்பப்பரி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இப்படத்தை சூப்பர் டூப்பர் படத்தை இயக்கிய அருண்கார்த்திக் இயக்குகிறார்.
Related Tags :
Next Story