7-வது முறையாக இணையும் டி.இமான் கூட்டணி - கொண்டாடும் ரசிகர்கள்


7-வது முறையாக இணையும் டி.இமான் கூட்டணி - கொண்டாடும் ரசிகர்கள்
x
தினத்தந்தி 25 Jan 2022 11:10 PM IST (Updated: 25 Jan 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் சினிமாவில் 6 முறை இணைந்து வெற்றி படங்களை கொடுத்த கூட்டணி 7-வது முறையாக மீண்டும் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் சுசீந்திரன். இவர் நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா, மாவீரன் கிட்டு, ஈஷ்வரன் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது புதிய படமொன்றை தொடங்கவுள்ளார். இப்படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கவுள்ளார்.

இப்படத்தில் இசையமைப்பாளர் டி.இமான் இணைந்துள்ளார். இயக்குனர் சுசீந்திரனும் டி.இமானும் இதுவரை 6 படங்கள் ஒன்றாக பணிபுரிந்திருக்கிறார்கள். இவர்களின் கூட்டணியில் இதுவரை பாண்டியநாடு, ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், கென்னடி கிளப் படங்கள் உருவாகியுள்ளது. தற்போது 7-வது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது.

இதனை இசையமைப்பாளர் டி.இமானின் பிறந்தநாளான நேற்று சுசீந்திரன் அறிவித்துள்ளார். இப்படத்தின் பாடல் கம்போசிங் நடைபெற்றுவருவதாகவும் அவர் கூறியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மே 1 ஆம் தேதி துவங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப குழுவினர் குறித்த அதிகாரபூர்வமாக அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
1 More update

Next Story