இளையராஜாவை பற்றி பகிர்ந்த லிடியன் நாதஸ்வரம்


இளையராஜாவை பற்றி பகிர்ந்த லிடியன் நாதஸ்வரம்
x
தினத்தந்தி 26 Jan 2022 5:20 PM GMT (Updated: 26 Jan 2022 5:20 PM GMT)

உலகளவில் இசையின் மூலம் பிரபலமானவர் லிடியன் நாதஸ்வரம் இவர் சமீபத்தில் இளையராஜாவை பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

உலகளவில் மிகவும் பிரபலமானவர் லிடியன் நாதஸ்வரம். பியானோ சாதனையாளரான லிடியன் நாதஸ்வரம் தனது இசை திறமையால் அனைவரையும் கவர்ந்தார். 14 இசைக்கருவிகளை வாசிக்ககூடிய திறமை படைத்த அவர், தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் 'பரோஸ்' என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதற்கிடையில் லிடியன் நாதஸ்வரம் இசைஞானி இளையராஜாவிடம் இசையும் கற்று வருகிறார்.  

இந்நிலையில் இளையராஜாவை குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள லிடியன் நாதஸ்வரம், "என்னுடைய இசை ஆசிரியர் இளையராஜா என்னிடம், நான் அவரது முதல் மற்றும் ஒரே மாணவன் என்றார். தினமும் எனக்கு அன்புடனும் அரவணைப்புடனும் இசையைப் பயிற்றுவிக்கிறார். உங்களுடைய வாழ்த்தும் ஆசிர்வாதமும் வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இலையராஜாவிடம் பயிற்சி பெரும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Next Story