பிக்பாஸ் அல்டிமேட்... ஒரே நாளில் 2 போட்டியாளர்கள் அறிவிப்பு


பிக்பாஸ் அல்டிமேட்... ஒரே நாளில் 2 போட்டியாளர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Jan 2022 4:48 PM GMT (Updated: 28 Jan 2022 4:48 PM GMT)

பிக்பாஸ் அல்டிமேட் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இன்று ஒரே நாளில் 2 போட்டியாளர்களை பற்றிய விவரங்களை அறிவித்திருக்கிறார்கள்.

பிக்பாஸ் 5-வது சீசன் நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் சீசன் 5-ன் டைட்டிலை வென்றார். இந்நிகழ்ச்சி முடியும் தினத்தில், பிக் பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள்.

அதன்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்களை அறிவித்து வருகிறார்கள். அதன்படி முதல் போட்டியாளராக சினேகன், அடுத்ததாக ஜூலி, வனிதா ஆகியோர் செல்ல இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது. தற்போது இன்று சுரேஷ் மற்றும் அபிராமி செல்ல இருப்பதாக ஒரே நாளில் 2 அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

Next Story