மீண்டும் தள்ளிப்போன ஆலியா பட் திரைப்படம்


மீண்டும் தள்ளிப்போன ஆலியா பட் திரைப்படம்
x
தினத்தந்தி 31 Jan 2022 4:46 PM GMT (Updated: 31 Jan 2022 4:46 PM GMT)

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஆலியா பட் நடித்த கங்குபாய் கத்யாவாடி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போனது.

உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை ஆலியா பட். இவர் தற்போது கங்குபாய் கத்யாவாடி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'கங்குபாய் கத்யாவாடி' படத்தின் டீசர் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 1960களில் மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியில் வாழ்ந்த கங்குபாய் என்பவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த படம் கடந்த ஜனவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையில் ஜனவரி 7ஆம் தேதி ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம் வெளியாகவிருந்தது. இரண்டுமே பெரிய பட்ஜெட் படங்கள் என்பதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டு 'கங்குபாய் கத்யாவாடி' தள்ளிப்போனது.

அதன்பின்னர் பிப்ரவரி 18 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இப்படம் வெளியிட்டிலிருந்து தள்ளிபோனது. வருகிற பிப்ரவரி 25ஆம் தேதி வெளியாகும் கங்குபாய் கத்யாவாடி திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story