அடையாளத்தை மாற்றுவதற்கான பயணம்- கவனம் ஈர்க்கும் லேபில் டிரைலர்


அடையாளத்தை மாற்றுவதற்கான பயணம்- கவனம் ஈர்க்கும் லேபில் டிரைலர்
x

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'லேபில்'. இதில் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார்.

பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'லேபில்'. இதில் ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அருண்ராஜா காமராஜின் முதல் வெப்தொடரான 'லேபில்' தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைக்க ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். பி.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளனர்.

இந்த வெப்தொடரின் ஃபர்ஸ்ட்லுக் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரைலர் பெரும் பாராட்டுகளை குவித்து வருகிறது. 'லேபில்' வெப் தொடர் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story