வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம் எனக்கு செட்டாகாது - நடிகர் அசோக் செல்வன்


வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம் எனக்கு செட்டாகாது - நடிகர் அசோக் செல்வன்
x

அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழில் சூதுகவ்வும் படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு 'ஓ மை கடவுளே' திருப்புமுனை படமாக அமைந்து. தற்போது 'நித்தம் ஒரு வானம்' படத்தில் நடித்துள்ளார். இதில் ரிதுவர்மா, அனுபமா பாலமுரளி, ஷிவாத்மிகா ஆகிய 3 கதாநாயகிகள் உள்ளனர். இப்படத்தை ரா.கார்த்திக் இயக்கியுள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகர் அசோக் செல்வன் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார். அவர் பேசியதாவது, " ஒவ்வொரு படமும் மாறுபட்ட களங்களில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அப்படித்தான் என் படங்களை தேர்ந்தெடுக்கிறேன்.

'நித்தம் ஒரு வானம்' படம் மூன்று கதாபாத்திரங்கள் என்று நினைத்து தான் செய்தேன். இப்போது அதற்கு வரும் பாராட்டுக்கள் மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தை தந்துள்ளது. அடுத்தடுத்து மாறுபட்ட களங்களில் நிறைய படங்கள் செய்யவுள்ளேன். கிராமத்து கதையில் நடிக்க வேண்டுமென எனக்கும் ஆசை இருக்கிறது. இப்போது ஒரு படத்தில் பேசி வருகிறோம் விரைவில் கிராமத்து கதையில் என்னை பார்க்கலாம்.

எனக்கு இப்போதைக்கு கல்யாண பேச்சு இல்லை. ஆனால் வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம் என் குணத்திற்கு செட்டாகாது. அடுத்ததாக சரத்குமார் சாருடன் இணைந்து ஒரு திரில்லர் படத்தில் நடித்துள்ளேன். மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். அது பற்றிய தகவல்கள் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகும். எனக்கு எப்போதும் போல் உங்கள் ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன்" என்று பேசினார்.

1 More update

Next Story