நடிகரான பாடலாசிரியர்


நடிகரான பாடலாசிரியர்
x

பிரபல பாடல் ஆசிரியர் ஏ.ரமணிகாந்தன். இவர் லைசென்ஸ், கழுமரம், கடவுளுக்கும் தெரியுமப்பா, ஊர் உலா, அடங்காமை, அலப்பறை உள்ளிட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதி உள்ளார். பாடகராகவும் இருக்கிறார். கீழடி பாடல், ராஜராஜ சோழன் பாடல், பொங்கல் திருநாள் பாடல் ஆல்பங்களையும் வெளியிட்டு உள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்கப் பாடகி சிந்தியா லவுர்டே தயாரித்து, சுகுமார் அழகர்சாமி இயக்கி திரைக்கு வந்த `வர்ணாஸ்ரமம்' திரைப்படத்தில் பாடலாசிரியர் ஏ.ரமணிகாந்தன் குணசித்திர நடிகராக அறிமுகமானார். அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. இதையடுத்து புதிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிகின்றன.

1 More update

Next Story