படுக்கைக்கு அழைப்பு: பட உலகை சாடிய பிரபல நடிகை மோனா சிங்


படுக்கைக்கு அழைப்பு: பட உலகை சாடிய பிரபல நடிகை மோனா சிங்
x

இந்தி நடிகை மோனாசிங்கும் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை பகிர்ந்து பட உலகை சாடி உள்ளார்.

திரையுலகில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இந்த புகாரில் சிக்கி உள்ளனர்.

இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை மோனாசிங்கும் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை பகிர்ந்து பட உலகை சாடி உள்ளார். இவர் மாதவன், கரினா கபூர் நடிப்பில் 2009-ல் வெளியான 3 இடியட்ஸ் படத்தில் அறிமுகமாகி அமீர்கானின் லால் சிங் சத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

மோனா சிங் அளித்துள்ள பேட்டியில், "நடிக்க வாய்ப்பு கேட்டபோது என்னையும் படுக்கைக்கு அழைத்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு படத்துக்கு நடிகை தேர்வு நடப்பதை அறிந்து புனேயில் இருந்து மும்பைக்கு சென்றேன். அங்கு ஒன்றிரண்டு பேரின் நடவடிக்கை மோசமாக இருந்தது. என்னை பாதுகாத்துக்கொள்ள அங்கிருந்து தப்பி செல்ல தோன்றியது. எப்படி தப்பி ஓடுவது என்று மீண்டும் மீண்டும் சிந்தித்தேன்.

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது சினிமாவில் மட்டுமன்றி எல்லா துறையிலும் இருக்கிறது. அதை பார்த்து பயப்பட கூடாது. என்னை படுக்கைக்கு அழைத்த காரணத்தினால் நடிப்பே வேண்டாம் என்று ஒதுங்கிவிடாமல் அதை எதிர்கொண்டு வாய்ப்புகளை தேடி நடிகையானேன். வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது இப்போதும் நடக்கிறது'' என்றார்.


Next Story