44 வயதாகிறது, இனி சித்தி கதாபாத்திரம்தான் - நடிகை பூஜா கலகலப்பு


44 வயதாகிறது, இனி சித்தி கதாபாத்திரம்தான் - நடிகை பூஜா கலகலப்பு
x

நடிகை பூஜா சமூக வலைதளங்களில் தனது வயதை வெளிப்படையாக தெரிவித்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

'ஜேஜே', 'உள்ளம் கேட்குமே', 'அட்டகாசம்', 'நான் கடவுள்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பூஜா. இலங்கையைச்சேர்ந்த அவர், கடந்த 2016-ம் ஆண்டு பிரஷான் டேவிட் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்தார். அதன் பிறகு படங்களில் நடிக்காமல் சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

ஆனால் அவ்வப்போது டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது, "நீங்கள் இன்றும் அழகாக இருக்கிறீர்கள். மீண்டும் படங்களில் நடிக்கலாமே... உங்களை பார்க்க ஆவலாக இருக்கிறோம்" என்று ஒரு ரசிகர் கேட்டார்.

இதற்கு, "அய்யோ... இப்போது வயதாகி விட்டது. 44 வயது கடந்து விட்டது. இனிமேல் எப்படி நடிக்க முடியும்? அப்படி நடிக்க வேண்டும் என்றால் சித்தி கதாபாத்திரங்களில்தான் நடிக்க வேண்டும்" என்று கலகலப்பாக பதில் அளித்தார்.


தமிழ் சினிமாவின் எதார்த்தத்தை அழகாக சொல்லிவிட்டதாக ரசிகர்களும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

1 More update

Next Story