தீவிர ஒர்க்-அவுட் மோடில் ஆண்ட்ரியா.. வைரலாகும் வீடியோ
நடிகர், பாடகர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆண்ட்ரியா. இவர் தற்போது தீவிர ஒர்க்-அவுட் மோடில் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
பச்சைகிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், தரமணி, வடசென்னை, மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஆண்ட்ரியா. நடிகராக மட்டுமல்லாது பாடல்கள் பாடியும் ரசிகர்களை கவர்ந்தார். கண்ணும் கண்ணும் நோக்கியா, இதுவரை இல்லாத உணர்விது, கூகுள் கூகுள், ஊ சொல்றியா மாமா உள்ளிட்ட பல பாடலகளை பாடி தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
சில படங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா, தற்போது தீவிர ஒர்க்-அவுட் மோடில் இருக்கும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்குகளை குவித்து ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Related Tags :
Next Story