ஏ.ஆர். ரஹ்மானை சந்தித்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்..


ஏ.ஆர். ரஹ்மானை சந்தித்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்..
x

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். இவர் அமெரிக்காவிற்கு இசை சுற்றுப்பயணத்திற்காக சென்றுள்ளார்.

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதையடுத்து இவர் அமெரிக்காவிற்கு இசை சுற்றுப்பயணத்திற்காக சென்றுள்ளார். மேலும், அமெரிக்காவில் இருந்து "பொன்னியின் செல்வன்" மற்றும் "கோப்ரா" படங்களின் பின்னணி இசை பணிகளை மேற்கொண்டுள்ளார். இதற்கான புகைப்படங்களை சமீபத்தில் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் நெப்போலியன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்துள்ளார். இதற்கான புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட நெப்போலியன், "ஆஸ்கார் நாயகன் திரு ஏ.ஆர். ரஹ்மான் அவர்களை நாங்கள் வசிக்கும் அமெரிக்காவில் நாஷ்வில்லில் நேற்று இரவு (ஆகஸ்ட் 9 ) சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..! மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் பேசினார்..! பல ஆண்டுகளுக்குப் பின்னால் சந்திக்கிறேன்..! அதே அன்பான உபசரிப்பு…!" என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story