இயக்குனர் அமீரின் புதிய பாதை


இயக்குனர் அமீரின் புதிய பாதை
x

நடிகர்-நடிகைகள் சினிமா தாண்டி பிற தொழில்களில் முதலீடு செய்வது வழக்கம். முன்னணி நடிகைகள் பலரும் டீக்கடைகள் முதல் அலங்கார நகைக் கடைகள் வரை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் இயக்குனர் அமீரும் இணைந்து இருக்கிறார். அவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு ஓட்டலை தொடங்கி இருக்கிறார். இயக்குனர் வெற்றிமாறனும், நடிகர் சூரியும் இந்த புதிய கடையை திறந்து வைத்துள்ளனர். "நல்ல உறவுகளுடன் உணவருந்தி கலந்துரையாடுவது மிக நல்ல விஷயம். அந்த நல்ல நோக்கத்திற்காக இந்த கடை திறக்கப்பட்டுள்ளது" என்று அமீர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story