நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்


நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
x

இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எமகாதகி’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'எமகாதகி'. இப்படத்தில் ஒரு பெண் முதன்மை நாயகி கதாப்பாத்திரத்தில் ரூபா கொடுவயூர் நடித்துள்ளார். மேலும் நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ஆர்.ராஜூ, சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். புதுமுகங்களால் உருவாகும் இப்படம் எந்தவித சமரசமுமின்றி முழுக்க முழுக்க கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை நடிகர் வெங்கட் ராகுல், ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஸ்ரீஜித்சாரங் இணைந்து தயாரித்துள்ளனர்.

தஞ்சாவூரை சுற்றிய கிராமங்களில் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது. கிராமத்து பின்னணியில் நடக்கும், சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டார். இந்த ஃபர்ஸ்ட் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

1 More update

Next Story