கட்டப்பா பாணியில் நன்றி கூறும் காஜல் அகர்வால்.. ராஜமவுலிக்கு டெடிகேட் செய்த வீடியோ..


கட்டப்பா பாணியில் நன்றி கூறும் காஜல் அகர்வால்.. ராஜமவுலிக்கு டெடிகேட் செய்த வீடியோ..
x

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை காஜல் அகர்வால். இவர் இந்தியன் -2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த இவர் அதன்பின் மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். தற்போது இவர் இந்தியன் -2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் நீல் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் "பாகுபலி" கட்டப்பா பாணியில் இயக்குனர் ராஜமவுலிக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் காஜல் அகர்வால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாகுபலிக்கு தான் அடிமை என்பதை குறிக்கும் வகையில் கட்டப்பா, பாகுபலியின் காலை தனது தலையில் வைப்பார். அது போன்று தன் குழந்தையின் காலை காஜல் அகர்வால் தன் தலை மீது வைத்து, " ராஜமவுலி சார்.. இது உங்களுக்காக நீல் மற்றும் என்னுடைய அர்ப்பணிப்பு. நாங்கள் எப்படி முடியாது என்று சொல்ல முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

1 More update

Next Story