படத்தின் விளம்பரத்திற்காக நாக சௌர்யா எடுத்த புதிய முயற்சி.. குவியும் பாராட்டுக்கள்


படத்தின் விளம்பரத்திற்காக நாக சௌர்யா எடுத்த புதிய முயற்சி.. குவியும் பாராட்டுக்கள்
x

அனிஷ் ஆர் கிருஷ்ணா இயக்கத்தில் நாக சௌர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கிருஷ்ண விருந்தா விஹாரி'. இப்படத்தின் விளம்பரத்திற்காக ஆந்திர மாநிலம் முழுவதும் "பாத யாத்ரா" நடந்து வருகிறது.

அனிஷ் ஆர் கிருஷ்ணா இயக்கத்தில் நாக சௌர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கிருஷ்ண விருந்தா விஹாரி'. இதன் கதாநாயகியாக ஷெர்லி செட்டியா நடித்துள்ளார். இப்படத்தை 'ஐரா கிரியேஷன்ஸ்' சார்பில் பிரபல தயாரிப்பாளர் உஷா முல்பூரி தயாரித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மஹதி ஸ்வர சாகர் இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பொதுவாக நடிகர்கள் தங்கள் திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதில் அதிக ரிஸ்க் எடுப்பதில்லை, இருப்பினும் அவர்கள் வழக்கமான அல்லது தனித்துவமான விளம்பர நிகழ்வுகளில் பங்கேற்கிறார்கள். ஆனால், இம்மாதம் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் தனது கிருஷ்ண விருந்தா விஹாரி படத்திற்கு மிகப்பெரிய மைலேஜ் தர வேண்டும் என்று ரிஸ்க் எடுக்க நாக சௌர்யா முடிவு செய்துள்ளார்.

இதற்காக திருப்பதியில் இருந்து விசாகப்பட்டினம் வரை மொத்தம் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இது ஆந்திர மாநிலம் தழுவிய பாதயாத்திரை. திருப்பதியில் ஆரம்பித்து இப்போது மூன்றாவது நாளாக யோ விஜயவாடாவை அடைந்துள்ளது.

மழை வெயில் என பாராமல் ஓய்வு எடுக்காமல் நடந்துகொண்டிருக்கும் நாக சௌர்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. படத்தின் விளம்பரத்திற்காக அவர் எடுத்திருக்கும் இந்த முயற்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

1 More update

Next Story