கைக்கடிகாரங்களை சேகரிக்கும் நயன்தாரா


கைக்கடிகாரங்களை சேகரிக்கும் நயன்தாரா
x

நயன்தாரா கைக்கடிகாரங்களை சேகரித்து வருகிறார். ரூ.1.2 கோடி மதிப்புடைய ஆர்.எம்.11 சீரீஸ் கைக்கடிகாரங்களையே நயன்தாரா அணிகிறார்.

நடிகர் நடிகைகளுக்கு வெவ்வேறு பழக்கங்கள் உள்ளன. சிலர் விதவிதமான கார்களையும் இன்னும் சிலர் கைப்பைகள், நகைகள், காலணிகள் உள்ளிட்ட பொருட்களையும் வாங்கி பத்திரப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த வரிசையில் நயன்தாரா கைக்கடிகாரங்களை சேகரித்து வருகிறார். கைக்கடிகாரங்களை வைக்க வீட்டில் பிரத்யேகமாக பீரோ ஒன்றையும் வைத்து இருக்கிறார் என்கின்றனர். வெளிநாடுகளுக்கு செல்லும்போது விதவிதமான கைக்கடிகாரங்களை வாங்கி வந்து பிரோவில் சேர்த்து வைக்கிறார்.

பொதுவாக ஆர்.எம்.11 சீரீஸ் கைக்கடிகாரங்களையே நயன்தாரா அணிகிறார். பிளாட்டினம் கோட்டிங்குடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கைக்கடிகாரத்தின் விலை சுமார். ரூ.1 கோடியே 20 லட்சம் என்கின்றனர்.

தனக்காக கைக்கடிகாரங்கள் வாங்குவது மட்டுமன்றி மற்றவர்களுக்கும் அவற்றை பரிசாக வழங்குகிறாராம். தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் முடிந்ததும் அந்த படத்தில் பணியாற்றிய மேக்கப் மேன், உடை அலங்கார நிபுணர், பவுன்சர்கள் உள்ளிட்டோருக்கு விலை உயர்ந்த வாட்ச்சுகளையே பரிசாக அளிப்பதாக கூறுகின்றனர்.


Next Story