பாலிவுட்டிலும் தடம் பதித்த புஷ்கர்-காயத்ரி.. குவியும் பாராட்டுக்கள்


பாலிவுட்டிலும் தடம் பதித்த புஷ்கர்-காயத்ரி.. குவியும் பாராட்டுக்கள்
x

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விக்ரம் வேதா திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பு பெற்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்துள்ளனர். தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இந்தியிலும் இயக்கியிருந்தார்கள்.

ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் திரையுலகினர் என பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. தமிழில் வெளியான விக்ரம் வேதா படத்தை போன்று இந்தியிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாகவும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் படமாகவும் உருவாகி உள்ளது. இப்படத்தின் திரைக்கதை வடிவத்தை இந்தி திரையுலகம் வியப்பில் பார்த்து வருகிறது. இப்படம் மூலம் இந்தியில் தங்களுடைய தடத்தை பதித்துள்ள புஷ்கர்-காயத்ரிக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளது.

1 More update

Next Story