ராஷ்மிகாவின் அடுத்த குறி


ராஷ்மிகாவின் அடுத்த குறி
x

கன்னட நடிகையான ராஷ்மிகா, தெலுங்கில் புகுந்து விளையாடி பல வெற்றிப் படங்களை கொடுத்தார். 'விஜய்யுடன் நடிப்பதே தனது ஆசை' என்று கூறி 'வாரிசு' படத்தில் நடித்தார். இப்போது இந்தியில் ஓரிரு படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில், 'மலையாள சினிமாவில் நல்ல படைப்புகள் வருகின்றன. அங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள்' என்று பேசியுள்ளார். இதன்மூலம் மலையாளத்திலும் நுழைய அம்மணி சூசகமாக அழைப்பு விட்டிருக்கிறார் என்கின்றனர். தேங்காய் எண்ணெய் உணவு அவருக்கு ரொம்ப இஷ்டமாம்!


Next Story