நான் இல்லாதபோது என் ஆள்மேல கைவச்சயாமே- கவனம் ஈர்க்கும் சந்தானம் பட டீசர்


நான் இல்லாதபோது என் ஆள்மேல கைவச்சயாமே- கவனம் ஈர்க்கும் சந்தானம் பட டீசர்
x

நடிகர் சந்தானம் ‘கிக்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கிக்' படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிப் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் தன்யா ஹோப், ராகினி திவிவேதி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

பார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார். சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழு சமீபத்தில் யு/ஏ சான்றிதழ் வழங்கியது.

இந்நிலையில், 'கிக்' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. வழக்கமான சந்தானம் காமெடியுடன் உருவாகியுள்ள இந்த டீசரில் 'நான் இல்லாத போது என் ஆள் மேல கை வச்சயாமே' போன்ற வசனங்கள் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

'கிக்' திரைப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story