சிவாஜி கணேசன் குடும்பத்தில் அடுத்த ஹீரோ


சிவாஜி கணேசன் குடும்பத்தில் அடுத்த ஹீரோ
x

சிவாஜி கணேசனின் மற்றொரு பேரன் தர்சன் கணேசனும் சினிமாவில் கதாநாயகனாக களம் இறங்க இருக்கிறார்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார். இவரின் 2-வது மகன் தர்ஷன் கணேசன். இவர் மிக விரைவில் ஒரு படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

இதுபற்றி ராம்குமார் கூறியதாவது:- ஏற்கனவே எனது மூத்த மகன் துஷ்யந்த் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருப்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். அவருக்கு அடுத்ததாக தர்ஷன் கணேசனும் நடிக்க வருகிறார். புனேயில் நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் தெருக்கூத்து நாடகங்களை அரங்கேற்றிவிட்டு தகுந்த பயிற்சிபெற்று வருகிறார். அவருக்கு பல பட நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன. விரைவில் இது குறித்த முறைப்படியான அறிவிப்பு வெளிவரும் என்று அவர் கூறினார்.

1 More update

Next Story