ஆஸ்கருக்கு செல்லும் நடிகர் விக்ரம் படம்


ஆஸ்கருக்கு செல்லும் நடிகர் விக்ரம் படம்
x

தங்கலான் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப முடிவு செய்து இருப்பதாகவும் படக்குழு அறிவித்து உள்ளது.

விக்ரம் ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரத்துக்காக உடலை வருத்தி தோற்றத்தை மாற்றி நடித்து வருகிறார். முந்தைய பிதாமகன், அந்நியன், கந்தசாமி, பீமா, தெய்வத்திருமகள், ஐ, கடாரம் கொண்டான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்கள் இதற்கு சாட்சிகளாக உள்ளன.

தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும் தங்கலான் படமும் விக்ரமின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கோலார் தங்க வயலில் பணியாற்றிய தொழிலாளர்களின் வாழ்க்கையையும் அதிகார வர்க்கத்துக்கு எதிரான அவர்களின் மோதலையும் மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது.

இதில் விக்ரம் நீண்ட தாடி, தலைமுடியுடன் பண்டைய கால காட்டுவாசி போன்று வித்தியாசமாக நடிக்கும் தோற்றம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. இதற்காக பலமணிநேரம் மேக்கப் போட்டு நடிக்கிறார்.

தங்கலான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடப்பதாகவும் இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளதாகவும் தங்கலான் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப முடிவு செய்து இருப்பதாகவும் படக்குழு அறிவித்து உள்ளது.

1 More update

Next Story