விஜய்சேதுபதி வெளியிட்ட விமல் பட டிரைலர்
விமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தெய்வ மச்சான்’. இப்படம் வருகிற 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'தெய்வ மச்சான்'. இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை நேகா நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பாண்டியராஜன், 'ஆடுகளம்' நரேன், பாலசரவணன், வேல.ராமமூர்த்தி, முருகானந்தம், வத்சன் வீரமணி, தங்கதுரை, பிக் பாஸ் அனிதா சம்பத், தீபா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கேமில் ஜே. அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு காட்வின் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
'தெய்வ மச்சான்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story