பொற்கோவிலில் மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டம் - அசத்திய அல்லு அர்ஜுன்


பொற்கோவிலில் மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டம் - அசத்திய அல்லு அர்ஜுன்
x

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன். இவர் தனது குடும்பத்துடன் பொற்கோவில்லு சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அல்லு அர்ஜுன் மனைவி சினேகா ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story